இந்தியாவை சேர்ந்த துபாய் தொழிலதிபருக்கு விருது!

துபாய்:மத்தியகிழக்கு நாடுகளில் சிறந்த இளைய தொழிலதிபர் விருது டாக்டர்.தேஜிந்தர் சிங்குக்கு கிடைத்துள்ளது.இந்தியாவைச்சேர்ந்த இவர் பத்தாண்டுகளுக்கும் மேல் துபாயில் வசித்து வருகிறார்.
ஐந்தாவது ஆண்டாக இளைய தொழிலதிபர் விருதை பெற தனது வெளிப்படையான வர்த்தகம், கடின உழைப்பால் தேர்வாகி உள்ளார்.இவரது க்யூ டிக்கெட் என்ற ஆன் லைன் டிக்கெட் வழங்கும் நிறுவனமும், பிபிஓ ப்ளஸ் நிறுவனமும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அவற்றை இந்தியா, பாகிஸ்தான், இலங்கைக்கும் விரிவுபடுத்த சிங் திட்டமிட்டுள்ளார்.மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது உள்ளூர் இளைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் தொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை தொழில்முனைவோரை கலந்து ஆலோசித்து அமைக்க வேண்டும் என்று தேஜிந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here