சிமெண்ட் மூட்டை லாரி விபத்தில் 19 பேர் பலி!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகர் – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பாவல்யாலி பகுதியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான சிமெண்ட் மூட்டைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here