கழுத்தறுத்து கணவனை கொல்லமுயன்ற பெண் கைது!

கன்னியாகுமரி: கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.களியக்காவிளை மரியகிரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சர்ஜின், இவர் மனைவி பபிதா. 8 ஆண்டுகளுக்கு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பின் சர்ஜினுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது.வியாழன் இரவு சர்ஜின், பிபிதாவைத் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த பிபிதா, இன்று காலை வீட்டில் சர்ஜின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சர்ஜின் சத்தம்போட முயலவே கத்தியால் அவரது கழுத்தை பிபிதா அறுத்து அங்கிருந்து தப்பினார்.
உடைகளில் ரத்தக்கறையுடன் தப்பியோடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சர்ஜின் சிகிச்சை பெற்றுவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here