உறுப்புதானத்துக்கு தடையாகவுள்ள சட்டம்! கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கு!!

பெங்களூர்: சிறுநீரக தானம்செய்ய தடையாக உள்ள சட்டத்தை திருத்தக்கோரி பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்துள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரி இதுதொடர்பாக மனுச்செய்துள்ளார்.அதில், உறுப்புதானம் செய்வதற்காக குடும்பத்தினரின் ஒப்புதல் கட்டாயம் என்று விதிமுறை உள்ளது.
நான் எனக்குப்பிடித்தவரும், நாட்டின் பாதுகாப்பு சேவைசெய்துவருபவருமான குடும்ப நண்பருக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்புகிறேன்.குடும்பத்தினர் இதில் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
சுயமாக முடிவெடுக்கும் வயதுள்ள, உலகம் தெரிந்த என்னால் மனப்பூர்வமாக உறுப்புதானம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறேன்.
உறுப்புதானம் தொடர்பான சட்டப்பிரிவு 9ன் கீழ் வரும் நடைமுறைகளை நீக்கி என்னை உறுப்புதானம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் அப்பெண் கூறியிருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அப்பெண்ணின் குடும்ப நண்பர் ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். சிறுநீரக பாதிப்பால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here