சுற்றுலா துறையை ஊக்குவிக்க கப்பலில் நடந்த அமைச்சரவை கூட்டம்!

உத்திரகாண்ட்: உத்தரகாண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் நடந்தது.கூட்டத்தை தெஹ்ரி ஏரி அணையில் உள்ள கப்பலில் அமைச்சரவை கூட்டம் நடத்த
முடிவு செய்யப்பட்டு இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கப்பலில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.சுற்றுலாவை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டங்கள் சட்டமன்றங்களில் நடைபெறும் நிலையில் கப்பலில் இக்கூட்டம் நடத்தியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை நம்பியே இம்மாநிலத்தின் பொருளாதாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here