Connect with us

Tamilnadu

ரஜினி கட்சியின் மூத்த உறுப்பினர்!

Published

on

சென்னை:ரஜினி கட்சிக்காக 78 வயதிலும் உறுப்பினர்களை சேர்த்து வரும் ரசிகையை நேரில் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தா. இவர், ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைஅறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை, தனது இல்லத்துக்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator