நடிகையர் திலகம் படம்! ஜெமினியின் புகழை கெடுக்கிறது! மகள் கமலா குற்றச்சாட்டு!!

சென்னை: பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.படத்தில் சாவித்ரி மது குடிக்க ஜெமினிகணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு கமலா கூறியபோது சாவித்திரியின் மகன் மற்றும் மகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தது எனது தந்தை ஜெமினிகணேசன். அவரது புகழை கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பார்த்ததிலிருந்து வேதனைப்படுவதாகவும் கமலா செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.சினிமாவில் எந்த நடிகர், நடிகையையும் இதுபோல் தவறாக சித்தரிக்க வேண்டாம் எனவும் கமலா செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here