மும்பை டப்பா வாலாக்களின் அடுத்த டார்கெட்!

மும்பை: 125 ஆண்டுகள் பழமையான மும்பையில் மட்டுமே இயங்கி வரும் டப்பா வாலாக்கள் இனி பார்சல் மற்றும் கொரியர் சேவையை மேற்கொள்ள உள்ளனர்.சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தால்கர் கூறுகையில் மும்பையில் பார்சல், கொரியர் டெல்வரி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.உறுப்பினர்களின் வருவாயை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதனால் சுமார் 5000 பேர்கள் பயனடைவார்கள்.நிறுவனங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு இரண்டு லட்சம் டிபன் பாக்ஸ் வினியோகம் செய்யும் பணியில் டப்பா வாலாஸ் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here