கூடங்குளத்தில் அணுக்கழிவு! வைகோ கடும் கண்டனம்!!

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் வைக்கப்படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத்தையே இன்று அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான்.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு அணு உலைக்கழிவுகள் கர்நாடகாவுக்கு கொண்டுசெல்லமாட்டோம் என்று தெரிவித்தது.
அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்க 2018க்குள் போதிய கட்டமைப்புகள் நிறுவவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அணுக்கழிவுகளை பாதுகாக்க ஆழ்நிலை கருவூலம் அமைக்கும் தொழில்நுட்பம் எதுவும் இந்தியாவிடம் இல்லை. எனவே, அணு உலை மையம் அருகிலேயே அணுக்கழிவுகள் பாதுகாக்கப்படுகின்றன.அதற்கான அவகாசத்தை மேலும் 5ஆண்டு நீட்டிக்க உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடங்குளம் விரிவாக்கப்பணிகளை கைவிடவேண்டும். அணுக்கழிவுகள் உரிய பாதுகாப்புடன் ஆழ்நில கருவூலம் அமைத்து பாதுகாக்கப்படவேண்டும். என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here