கனிமொழி கட்டுரை வெளியிட நிபந்தனை!

சென்னை: கடந்த 2014ல் குமுதம் ரிப்போர்ட்டர் தமிழ் நாளிதழில் கனிமொழியின் வாழ்க்கை தொடரை வெளியிட்டது. அதில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகள் வருவதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் ரூ.1 கோடி நஷ்ட ஈடாக கேட்டிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன் கனிமொழியின் அனுமதியின்றி வாழ்க்கை தொடரை வெளியிட தடை விதித்து தீர்ப்பளித்தார். நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதாவது, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரது குடும்பம், திருமணம், கருத்தரிப்பது, குழந்தை பெறுவது, அவருடைய கல்வி ஆகிய அனைத்துடனும் தொடர்புடையதாகும்.ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி வெளியிடுவதற்கு முன்பு தொடரின் சுருக்கத்தை முதலில் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அவரிடமிருந்து வரும் திருத்தங்களை செய்து வெளியிடலாம். 48 மணி நேரத்தில் திருத்தங்கள் வரவில்லை என்றாலும் வெளியிடலாம்.தொடர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியே இருக்க வேண்டும். அவரின் நாடாளுமன்ற பணிகள் குறித்து இருக்கக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here