போலீஸ் காவலில் வாலிபர் மரணம்! மனைவிக்கு அரசு வேலை!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அகிலா.அப்பகுதியை சேர்ந்த வியாபாரியை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீஜித் மீது வராப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.போலீஸ் காவலில் இருந்த ஸ்ரீஜித்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார்  சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்தார். போலீசார் ஸ்ரீஜித்தை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். போலீசாரை கண்டித்து போராட்டமும் நடந்தது. கேரள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. சம்வம் தொடர்பான விசாரணையில் ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபர் ஸ்ரீஜித் மனைவிக்கு பரவூர் தாலுகாவில்
கிளார்க் வேலை வழங்கி ரூ.10 லட்சம் நிதியும் கேரள அரசு வழங்கியது. எர்ணாகுளம் கலெக்டர் முகமது சபீருல்லா ஸ்ரீஜித்தின் மனைவி அகிலாவிடம் வேலைக்கான உத்தரவையும் ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலையையும் வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here