குதிரைபேரம் பேசுவது நானல்ல! ஜனார்த்தன ரெட்டி சொல்கிறார்!!

பெங்களூர்:பாஜக தலைவர் ஜனார்த்தன ரெட்டி குதிரைபேரத்தில் ஈடுபடும் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ரெய்ச்சூர் எம்எல்ஏ பசனகவுடாவிடம் பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர்.சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில்,
எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறி வலை விரிக்கப்படுகிறது.
ரெய்சூர் எம்எல்ஏ பசவனகவுடாவிடம் மர்மநபர் ஒருவர் பேசுகிறார்.
அது ஜனார்த்தன ரெட்டி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
அந்த ஆடியோவில், பசவனகவுடாவா, சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தேவை. என்ன தேவையென்றாலும் கிடைக்கும். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவை என்றாலும் தருகிறோம்.மிக முக்கியமான, உயர்ந்த இடத்தில் உள்ளவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம்.
உங்களின் துரதிருஷ்டம் நீங்கள் வெற்றி பெற்றும் பயனில்லாமல் இருக்கிறீர்கள்.
நீங்கள் அமைச்சராகலாம், ரூ.150 கோடி பணம், பதவிகள் கிடைக்கும். என்று ஜனார்த்தன ரெட்டி பேசுகிறார்.
அதற்கு இல்லை மன்னித்து விடுங்கள், எனக்குத் தேர்தலில் வாய்ப்பளித்துப் போட்டியிட வைத்து வெற்றி பெறவைத்துள்ளார்கள்.

அவர்களுக்கு நான் துரோகம் செய்ய முடியாது. நான் உங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவனகவுடா தெரிவிக்கிறார்.
இந்த ஆடியோ பொய்யானது என்றும், காங்கிரசின் கற்பனை என்றும் ஜனார்த்தனரெட்டி, மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here