பேஸ்புக் வழியாக காதல்! 15நாளில் திருமணம்!!

குடியாத்தம்:பேஸ்புக் வழியாக காதல்செய்த ஜோடி 15நாளில் திருமணம் செய்துகொண்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சாமந்திபுரத்தை சேர்ந்தவர் நந்தினி(20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் வழியாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை காதலித்தார்.நெல்லூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த சுமன்(22) நந்தினியை தீவிரமாக காதலித்தார்.  15நாட்கள் இருவரும் இரவுபகலாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் வழியாக காதலை வளர்த்தனர்.3தினங்களுக்கு முன்னர் குடியாத்தத்தில் நடைபெற்ற கெங்கையம்மன் கோவில் விழாவுக்கு சுமனை வரவழைத்தார் நந்தினி. இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். சென்னைக்கு சென்று 2நாட்கள் தங்கியிருந்த ஜோடி குடியாத்தம் காவல் நிலையத்துக்கு இன்று வந்தது. தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.    இதேபோன்று மேலும் இரு காதல் ஜோடிகளும் காவல் நிலையத்தை தஞ்சம் அடைந்தனர். அவர்களது பெற்றோரை அழைத்துப்பேசிய போலீசார் குடும்பத்தினருடன் தம்பதியினரை அனுப்பிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here