சட்டப்பேரவை கூட்டம் காலையில் தொடங்குமா?

டெல்லி: கர்நாடகாவில் பாஜக அரசு தனது பெரும்பான்மையை சனிக்கிழமை நிரூபிக்க உள்ளது.  முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.இதற்கான வாக்கெடுப்பு மாலை 4மணிக்கு நடைபெறுகிறது. முதலில் எம்.எல்.ஏ. பதவியேற்பு, பின்னர் வாக்கெடுப்பு என்று சம்பிரதாயங்கள் முடிய இரவு 9மணிக்கு மேலாகிவிடும். எனவே, காலை 10மணிக்கு வாக்கெடுப்பு சம்பிரதாயத்தை தொடங்கலாம் என்று மஜத, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளன. எனினும் நள்ளிரவு வரையில் அதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு கிடைக்கவில்லை.

தற்காலிக சபாநாயகர் போப்பய்யா, எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர். அவர் விதிகளை மீறி ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விதிகள் படி, தேஷ்பாண்டேவை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் இரு கட்சிகளும் நீதிமன்றத்தில் கோரியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here