ரஜினியின் புதிய அரசியல் ஆலோசகர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது நற்பணி மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். இதற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணி முடிந்து அவர்களை சந்தித்து வருகிறார்.போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜை சந்தித்தார்.
சந்திப்பில் அப்துல்கலாம் அவர்களின் கனவு திட்டம் குறித்தும், தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகின்றன.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தொடங்கியுள்ளார். தற்போது ரஜினி பொன்ராஜை மீண்டும் சந்தித்துள்ளார். ரஜினியும் தனது அரசியல் பிரவேசத்திற்கு மறைந்த அப்துல்கலாமின் கனவுகளை கையிலெடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here