மோடியின் ஆசிபெற்றே முதல்வரானேன்!

பெங்களூர்:மோடியின் ஆசிபெற்று முதல்வரானேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.
முதல்வராக பதவியேற்ற பின்னர் பாஜக தலைமையகத்தில் நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க எனக்கு 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை நாட்கள் தேவையில்லை. நிச்சயம் அமைச்சரவையை ஏற்படுத்துவேன்.தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசும், மஜதவும் ஒன்றைஒன்று விமர்சித்தன.
தற்போது சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை ரிசார்ட்டில் அடைத்துவைத்துள்ளனர்.அவர்கள் செல்போன் பறிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடன் கூட பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதியில்லை.
யார் எங்கே எப்படியிருந்தாலும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைத்தே தீரும்.
எதிர்வரும் தேர்தல் அனைத்திலும் பாஜக வெற்றிபெறும். ஆசிரியர் தேர்தல், ஓரிரு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்று வருங்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் பாஜக வேட்பாளர்தான் வெற்றிபெறவேண்டும்.மக்களவை தேர்தலில் 28 இடங்களில் வென்று பிரதமர் மோடிக்கு காணிக்கை ஆக்கவேண்டும்.
எனது தலைமையிலான அரசு பாஜக நிர்வாகிகளுக்கும், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கும்.

 

 

எந்த ஒரு வேறுபாடின்றி நாம் ஒன்றாக நாடே வியக்கும் அளவுக்கு பாஜக அலையை கர்நாடகாவில் ஏற்படுத்துவோம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here