சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து சருமத்தை காக்க டிப்ஸ்!

வெயிலால் முகம் கறுப்பாவதை தடுக்க தர்பூசணிப்பழத்தின் சாறை, முகத்தில் பூசி கழுவலாம். வெயில் காலத்தில், கடலை மாவிற்கு பதில், பயித்த மாவு போட்டு குளியுங்கள். வெயிலில் சென்றுவிட்டு திரும்பியதும் கை, கால்களை கழுவிவிட்டு ப்ரிஜ் ஐஸ் கட்டிகளை மெல்லிய காட்டன் துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.வெயிலினால் கருமையாக மாறியுள்ள சரும பகுதிகளில் தேனை தடவி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கழவினால் பழைய நிறத்திற்கு தோல் மாறும்.குளிப்பதற்கு முன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து முகம், கை, கால்களில்
பூசி 20 நிமிடத்திற்கு பின் குளிக்கலாம். இதனால் சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகளை போக்க தயிரை சருமம் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவி சிறிது நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும தொற்று ஏற்படாது.முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது தேன் கலந்து சருமத்தில் தடவி வர சரும எரிச்சலை போக்குவதோடு சரும பாதிப்புகள் நீங்கி சிவந்த சருமத்தையும் சரி செய்யும்.
வெயில் காலத்தில் நம் உடம்பில் இருக்கும் உப்பு வியர்வையின் காரணமாக அதிகமாக வெளியேறும். அதனால் மாதுளை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் ஜூஸ் நிறைய குடியுங்கள். மேலும், கூழ் மற்றும் வெங்காயம் நிறையஎடுத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here