சவுதி இளவரசர் சல்மான் மாயம்?

ரியாத்:சவுதிஅரேபியா இளவரசர் சல்மான் கடந்த ஏப்ரல் மாதம் கடைசிவாரத்தில் இருந்து பொது இடங்களில் தென்படவில்லை.
அவர் மாயமாகி விட்டார். வெளிநாட்டுக்கு சென்று வசித்து வருகிறார் என்று பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன.கடந்த ஏப்ரலில் அமெரிக்காவை சேர்ந்த அரசுக்குழுவினருக்கு அரசர் விருந்துவைத்தார்.
அந்த விருந்து நிகழ்ச்சியில் சல்மான் பங்கேற்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
மத்தியகிழக்கின் சுதந்திர வெள்ளி என்று மேற்கத்திய நாடுகளால் பாராட்டப்படுகிறார் சல்மான்.35வயதான இவர் சவுதி அரசகுடும்பத்தின் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுகளுடன் போட்டியிட்டு தன்னை பட்டத்து இளவரசராக உயர்த்திக்கொண்டவர்.
பெண் சுதந்திரம், மதசுதந்திரம் என்று சுதந்திரப்போக்கு கொண்ட இவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட்குஷ்னருக்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி இரவு ஏமனில் இருந்து வந்த ஏவுகணைகள், டிரோன் தாக்குதலில் சல்மான் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

ஏப்ரல்21ம் தேதி இரவு அவரது மாளிகையை குறிவைத்தே ஏமன் ஏவுகணைகள் வந்தன. ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் ராணுவதளத்துக்கு சென்றார் என்று கூறப்படுகிறது.
அவர் வெளிநாட்டில் தங்கியுள்ளார். உடல்நலத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். வாரிசுகளில் ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார் என்றெல்லாம் வதந்திகள் இறக்கைகட்டி பறக்கின்றன.ரமலான் நோன்புகால தொடக்கத்தில் சல்மான் அரண்மனை பணியாளர்களை சந்திப்பது வழக்கம்.
இந்த ஆண்டு அவர் யாரையும் சந்திக்காதது அரண்மனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here