எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம்! ஆளுநருக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்!!

புதுடெல்லி: எடியூரப்பாவுக்கு ஆளுநர் வாஜூபாய்வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்ததை கண்டித்துள்ளார் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி. இதுகுறித்த ஆங்கில டிவிக்கு அவர் அளித்த பேட்டி:இது சட்டப்படி மிகவும் தவறு. மோடியின் நண்பர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்துவிடுவதா? அப்படியென்றால் மோடி நன்றாக இருக்கட்டும். நாடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுவதா?? இந்திய அரசியலமைப்பு இதுபோன்று எந்த ஒரு அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்கவில்லை.ஆளுநர் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இது ஊழலை ஊக்குவிக்க உதவும். ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்த சம்பவத்தின் பின்னணி காரணமாக மாற்றுக்கட்சியினரை பிடித்துவந்து தங்களுக்கு சாதகமாக்குவதற்குவார்கள். அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அவர் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறது. ஜனநாயகம் இதனை அனுமதிக்காது. இதுபோல் ஓட்டுக்களை வாங்கிவர யாரையும் எந்த கவர்னரும் முன்பு அனுமதித்ததில்லை.  இதுதொடர்பான வழக்கில் எனது பங்களிப்பை நான் நிச்சயம் செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here