பேத்தியை காப்பாற்ற உயிர்கொடுத்த பாட்டி!!

சென்னை: தனது உயிரைக்கொடுத்து பேத்தியின் உயிரை காப்பாற்றியுள்ளார் 48வயதுப்பெண் ஒருவர்.
சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசித்துவரும் பூவியாபாரி நடராஜன் (55). இவரது மனைவி லட்சுமி (48).இத்தம்பதியின் மகள் சுகன்யா. சுகன்யாவின் மகள் ரக்‌ஷ்னா.
8மாத வயதுடைய பேத்தி ரக்‌ஷனாவை மடியில் வைத்துக்கொண்டு பூ கட்டிக்கொண்டிருந்தார் லட்சுமி.
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடியில் உள்ள பால்கனி இடிந்துவிழுந்தது.

முதல்தளத்தில் இருந்த லட்சுமி, நடராஜன் மீது பால்கனி விழுந்தது.
சுதாரித்துக்கொண்ட லட்சுமி, தனது உடலை குனிந்து பேத்தியை காப்பாற்றினார். உடல்மீது விழுந்த காங்கிரீட் துண்டு லட்சுமி உயிரை பறித்தது. இச்சம்பவத்தில் நடராஜன் கால் முறிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here