கர்நாடகாவில் பாஜகவுக்கு வாய்ப்பு! கோவா, பிகாரில் பாஜகவுக்கு சிக்கல்!!

டெல்லி: தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைத்தார். எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணமும் செய்துவைத்தார்.இதேபோன்ற சூழ்நிலை கோவா, பிகார் மாநிலங்களில் நடந்தபோது அங்கு பெரும்பான்மை கட்சிகளை புறக்கணித்து பாஜக இடம்பெற்ற கூட்டணிக்கு சாதகமாக
ஆளுநர்கள் நடந்து கொண்டுள்ளனர்.பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள நிர்வாகியும், லாலுபிரசாத் மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் இதுகுறித்து கூறுகையில், கடந்த ஜூலை27ல் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் 80பேரை வைத்துள்ள எங்களுக்கு வாய்ப்பு தரமால் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநர் கே.என்.திரிபாதி வாய்ப்புத்தந்துள்ளார்.
இப்போதும் எங்கள் பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபிக்க தயார். ஆளுநர் எங்களுக்கு வாய்ப்புத்தருவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஸ் சதாங்கர் இதுகுறித்துகூறுகையில், எல்லா ஆளுநர்களும் ஒரேமாதிரியான சட்டம்தான். கர்நாடகாவின் ஆளுநர் தனிப் பெரும்பான்மை என்பதால் பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
கோவாவில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நாங்கள் வெள்ளிக்கிழமை ஆளுநர் மிருதுளா சின்காவை சந்திக்கிறோம். எங்களுக்கு ஆட்சிவாய்ப்பை தருமாறு வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here