எடியூரப்பாவின் முதல் கையெழுத்து! விவசாய கடன் தள்ளுபடி!!

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பா முதல்வராக இன்று பதவியேற்றார். எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தலைமைச் செயலகம் வந்து எடியூரப்பா முதல்வர் பணியைத் தொடங்கினார். முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலின் போது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here