தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர்! பிளஸ்டூவில் 1024 மதிப்பெண்!!

சங்கரன் கோவில்: திருநெல்வேலி சங்கரன் கோவிலை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தினேஷ். தந்தை குடிப்பழக்கத்தை விடாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட மாணவரிடமிருந்து கைப்பற்றிய கடித்தில் டாஸ்மாக்கை மூடுமாறும் இல்லையெனில் தான் ஆவியாக வந்து மூடுவேன் என எழுதியிருந்தது.இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவுகளை தினேஷின் சித்தப்பா பார்த்துள்ளார். தமிழ் 194 ஆங்கிலம் 148, இயற்பியல் 186, வேதியியல் 173, உயிரியல் 129, கணிதம் 194 மதிபெண்கள் தினேஷ் பெற்றுள்ளார். இவரின் மொத்த மதிப்பெண் 1024.தந்தையின் குடிப்பழக்கத்தால் இறந்த மாணவன் பெற்ற 1024 மதிப்பெண்கள் பயனற்று போனது என்றும் உறவினர்களும் பொது மக்களும் தெரிவித்தனர். மேலும் உயிர்கள் பலியாவதற்கு முன் டாஸ்மாக்கை மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here