காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி!

பெங்களூர்:கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேரளாவுக்கு செல்லமுயன்ற முயற்சியை மத்திய அரசு முறியடித்துள்ளது.
கர்நாடகாவில் 78எம்.எல்.ஏ.க்கள் சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்றனர்.
அவர்கள் 76பேர் காங்கிரஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனந்த்சிங், பிரதாப்கவுடா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் இந்த அணியில் இடம்பெறவில்லை. அவர்களை பாஜக தொடர்புகொண்டு தங்கள்பக்கம் இழுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதல்வரான எடியூரப்பா 4ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளார்.அண்ணாமலை என்ற அதிகாரி காங்கிரசார் தங்கியுள்ள ரிசார்ட் உள்ள மாவட்டத்துக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.
இதனால், ரிசார்ட்டை காலிசெய்ய காங்கிரஸ், மஜத தலைவர்கள் திட்டமிட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றை புக் செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் செல்ல தனிவிமானம் ஒதுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், வானிலை மாற்றத்தால் விமான பயணத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒத்திவைத்துள்ளனர்.
நள்ளிரவு வரை அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் ரிசார்ட்டிலேயே தங்கியிருந்தனர். பின்னர் 4 சொகுசு பஸ்களில்  பாண்டிச்சேரி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here