காவிரி மேலாண்மை ஆணையம்! உச்சநீதிமன்றம் விறுவிறு நடவடிக்கை!!

டெல்லி:காவிரிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது.
அதுதொடர்பான திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.காவிரி பங்கீடு தொடர்பாக முடிவெடுக்க 9பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்படும்.
மத்திய அரசு அதிகாரிகள் 5பேர், மாநிலபிரதிநிதிகள் 4பேர் அதில் இடம்பெறுவர்.
இந்த ஆணையம் முழு சுதந்திரத்துடன் இயங்கும் அமைப்பாக இருக்கும்.இன்று கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனுவில்,
அணைகளுக்கு போதிய நீர்சேரும் வரையில் குறைந்தபட்ச நீர் வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அம்சம் திட்ட அறிக்கையில் இல்லை என்று வாதிட்டது.
அதற்கு, அனைத்து அம்சங்களையும் இணைத்துள்ளோம் என்று மத்திய அரசு வக்கீல் கூறினார்.மத்திய அரசின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை, 4மாநில அரசுகளின் ஆலோசனையும் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த ஐந்து தினங்களில் இறுதி உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here