ஏழு வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கும் நந்திதா!

சென்னை: ஹீரோயினாக நடித்து வந்த அட்டகத்தி புகழ் நந்திதா ஏழு வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கவுள்ளார். ஜிஆர்மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நர்மதா.படத்தை அறிமுக இயக்குநர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.தாய் மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில் தொடங்கியது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய
கேரக்டரில் நடிக்கிறார். தாரை தப்பட்டை படத்தில் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ராஜ்புத் மயக்கம் மற்றும் கபாலி குறும்படங்களை இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here