கொள்ளையடித்து விட்டு உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்!

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கீழ்தளத்திலும், முதல் தளத்திலும் முகமது ஆசன் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். வீட்டிற்கு வந்த ஒரு இளைஞர், அதே முகவரியில் நண்பர் வசிப்பதாக ஆசன் மனைவியிடம் கூறியுள்ளார்.மேல் தளத்தில் உள்ள தனது கணவரிடம் கேட்குமாறு கூறியுள்ளார். சிறுதுநேரம் கழித்து கீழே வந்த அந்த இளைஞர், நண்பரை சந்தித்து விட்டதாக கூறி நன்றி தெரிவித்து சென்றுள்ளார்.அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து மேலே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் கணவன் வெளியே போனதை கவனிக்காமல் இருந்த சமயத்தை திருடன் பயன்படுத்தி கொண்டது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here