பர்கரில் பிளாஸ்டிக் துண்டு! வாடிக்கையாளரை பதம் பார்த்தது!!

டெல்லி: டெல்லி விஷ்னு கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் இவர் ராஜிவ் சௌக் ரயில் நிலையம் அருகே உள்ள பர்கர் கடையில் பர்கர் ஆர்டர் செய்துள்ளார்.பர்கரை சாப்பிட்ட போது அதிலிருந்த பிளாஸ்டிக் துண்டுதொண்டையில் மாட்டி காயத்தை ஏற்படுத்தியுள்ளது.குமார் இது தொடர்பாக மேலாளரிடம் முறையிட்டுள்ளார். அவர் அதை கண்டு கொள்ளாததால் போலீசில் புகார் அளித்தார்.குமாரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக
போலீசார் வழக்கு பதிவு செய்து பர்கர் கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here