பாஜகவிடம் முதல்வராக விண்ணப்பம்?

சென்னை: தமிழகமுதல்வர் பழனிச்சாமியை நீக்கிவிட்டு தன்னை முதல்வராக்க பாஜகவிடம் விண்ணப்பம் தருகிறார் பன்னீர்செல்வம் என்று குற்றம்சாட்டியுள்ளார் ப.சிதம்பரம்.கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவின் வெற்றி அக்கட்சி தென்னிந்தியாவில் பிரமாண்ட நுழைவு என்று வாழ்த்தியுள்ளார்.இக்கருத்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.ஓபிஎஸ் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? அல்லது ஈபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டுத் தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here