தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை! திடீரென்று முறித்தது வடகொரியா!!

சியோல்: வடகொரியா, தென்கொரியா அதிபர்கள் இருவரும் சந்தித்தது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இருந்தது. சீனா இதற்காக பெரிதும் முயன்றது. இச்சந்திப்பை தொடர்ந்து தனது அணுகுண்டு திட்டத்தை படிப்படியாக நிறுத்துவதாக வடகொரிய அதிபர் தெரிவித்தார்.இதற்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க முன்வந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங்-உன் அடுத்தமாதம்12ம் தேதி மலேசியாவில் சந்திப்பதாகவும் முடிவாகி இருந்தது.
இந்நிலையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுவருகின்றன.இதனை கைவிடுமாறு வடகொரியாவின் கோரிக்கையை அந்நாடுகள் ஏற்கவில்லை. எனவே, எங்கள் சமாதான திட்டத்தை கைவிடுகிறேன். மலேசியா சந்திப்பை மறுபரிசீலனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியா விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் இணைந்து போர் ஒத்திகையை தொடங்கின. 2வாரம் இப்பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்க அணு ஆயுத திட்டத்தை கைவிட்ட லிபியா, ஈராக் ஆகியவற்றின் தற்போதைய நிலை எல்லோருக்கும் தெரியும். அதுபோன்ற நிலை வடகொரியாவுக்கு ஏற்படக்கூடாது என்பதில் கிம்ஜாங் உன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here