திருக்குரான் வசனம் கூறி நிறவெறியரை திருத்தும் பெண்!

கலிபோர்னியா: அமெரிக்காவில் நிறவெறியுடன் சண்டையிட வந்தவரை திருக்குரான் வசனத்தை கூறி நல்வழிப்படுத்த முயன்றுள்ளார் ஒரு முஸ்லிம்பெண்.
கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார் கேத்லின் அமீனா.இவர் கல்லூரி அருகில் உள்ள ஸ்டார்பக்ஸ் காபி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
அங்கு காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு அமெரிக்க வாலிபர் வந்தார்.
கேத்லனிடம் சென்று இது ஏன் முகமூடி போட்டு பயமுறுத்துகிறாய்? எடுத்துவிடு என்று பர்தாவை குறிப்பிட்டார்.கேத்லின் நான் ஒரு முஸ்லிம் என்றார்.
அதற்குஅந்நபர், நான் உன் மதத்தை வெறுக்கிறேன். நீங்கள் என்னை கொல்லவந்தவர்கள் என்று ஆக்ரோஷமாக கூறுகிறார்.
அதற்கு கேத்லின், குரான் உனக்கு தெரியுமா? எனக்கேட்டார்.

ஒரு மனிதரை நீங்கள் கொல்ல நேர்ந்தால், மனிதசமுதாயத்தையே கொன்ற பழியை அடைவான் என்று கொல்லாமையை வலியுறுத்துகிறது இஸ்லாம் என்றார்.
அதனை கேட்காமல் அம்மனிதன் ஆவேசத்துடன் கடையை விட்டு வெளியேறுகிறார்.
இதனை விடியோ பதிவு எடுத்துள்ள கேத்லின் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அந்த விடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here