Connect with us

National

பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு! நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா!!

Published

on

பெங்களூர்:பாஜக ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.
அதில் 104 இடங்களில் மட்டுமே பாஜக பெற்றது.

காங்கிரஸ் 38இடங்கள் வென்ற மஜத ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.
அக்கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி தன்னை முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.இந்நிலையில், ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்.
வியாழன் கிழமை காலை 9மணிக்கு ஆளுநர் மாளிகை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.மேலும், எடியூரப்பா மெஜாரிட்டி நிரூபிக்க 11நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator