மோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு!

பெங்களூர்: பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் மஜத தலைவர் குமாரசாமி.   104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜக அரசமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி பேட்டியளித்தார். அதன்விபரம்:அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள் சகஜம்தான். இதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இதற்காக நான் ஆர்ப்பாட்டம், பிரச்சனைகள் எதுவும் செய்யப்போவதில்லை. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடன்பட்டு இத்தேர்தலில் வென்றுள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு.  அவர்களை யாரும் ஆசைகாட்டி அழைத்துச்சென்றால் என்ன செய்வது. எனவே, அவர்களை தனியார் ஓட்டலில் தங்கவைத்துள்ளேன். மத்தியில் ஆட்சி செய்யும் மோடிக்கும் இங்கு நடப்பது எல்லாம் தெரியும்.             அவர் ஐடி அதிகாரிகளை கொண்டு எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்.     எம்.எல்.ஏ.க்கள் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அவர்கள் மீது வழக்குகள் போடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் குதிரை வியாபாரத்தை மீண்டும் தொடங்குவார்கள். இதற்காகவா இவர்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள். விவசாயிகளும், சாதாரண மக்களுக்கும் கஷ்டமான நிலையில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால், அதிகாரிகள் ஒரு கோடி கொடு, இரண்டு கோடி கொடு உனது வழக்கை முடிக்கிறேன் என்று வசூலித்து வருகிறார்கள்.  இந்த பிரச்சனைக்கு எல்லாம் முடிவுகட்ட வேண்டும்.

 

நாளை யார் பதவியேற்றாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இவ்வாறு குமாரசாமி பேட்டியளித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here