குஜராத் வியாபாரியின் குதிரை பேரம்! ரம்யா பகீர் புகார்!!

பெங்களூர்: கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடத்துகிறது என்று பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார் நடிகை ரம்யா.                                     நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவை கவனித்து வருகிறார்.  காங்கிரஸ்-மஜத கூட்டணியை புறக்கணித்து ஆளுநர் பாஜகவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு நடிகை ரம்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பாஜக தலைவர்கள் குஜராத்தில் உள்ள தொழிலதிபர்களைக்கொண்டு  காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வருகிறது. அவர்கள் ஜனநாயகத்தை ஒருபோதும் மதிப்பதில்லை.   குஜராத் தொழிலதிபர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது. அவர்கள் பொதுத்துறை வங்கிகளை மோசடி செய்து பணத்தை பெறுகின்றனர்.அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்துவதில்லை.  பாஜக அவர்களது மோசடிக்கு துணை போகிறது. இதுகுறித்து தற்காலிக நிதியமைச்சர் பியூஷ்கோயல் என்ன பதில் சொல்லப்போகிறார். இவ்வாறு ரம்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here