தேர்வில் மகன் தோல்வி! உறவினர்களுக்கு விருந்தளித்த தந்தை!!

போபால்: மத்தியபிரதேச டிலி கிராமத்தை சேர்ந்த காண்டிராக்டர் சுரேந்திரகுமார் வியாஸ். இவரது மகன் அன்சு. 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். அன்சு தேர்வில் தோல்வி அடைந்ததை தந்தையிடம் கூறியுள்ளார்.மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மகனின் தேர்வு தோல்வியை கொண்டாட முடிவு செய்து அவரது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் அழைந்து விருந்து கொடுத்தார். பரீட்சைக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். அவனது தோல்வியை நான் பெரிய வி‌ஷயமாக எடுத்து கொள்ளவில்லை.அவனை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். பள்ளி தேர்வு மாணவர்களின் கடைசி தேர்வு இல்லை என்பதை பெற்றோர்களும் புரிந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here