வருகைப்பதிவில் மாற்றம்! எஸ் சார், எஸ் மேம் பதிலாக ஜெய்ஹிந்த்!!

மத்தியப்பிரதேசம்: மத்தியபிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவு எடுக்கும்போது மாணவர்கள் எஸ்சார், எஸ்மேம் என்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற வேண்டும்.மாணவர்களிடையே தேசப்பற்றை உருவாக்க இம்முடிவு எடுத்துள்ளதாக மத்தியபிரதேச பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா கூறியுள்ளார்.ஜெய்ஹிந்த் என்று கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்தியபிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இம்முறை மத்தியபிரதேசத்திலுள்ள 1.22 லட்ச அரசாங்க பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here