கர்நாடகா வாக்கு எண்ணிக்கை! மஜதவுக்கு இனிப்பு செய்தி !!

பெங்களூர்:கர்நாடகத்தில் கடந்த 12ம் தேதி பேரவை தேர்தல் நடைபெற்றது.
224 தொகுதிகளில் 2 தொகுதி தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கார்வார் வாக்கு மையத்தில் அரைமணிநேரம் முன்பாகவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னணியில் உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here