மஜத – காங்கிரஸ் டீல் என்ன?

பெங்களூர்:மஜத, காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்துள்ள ஒப்பந்தம் என்னவென்று தகவல்கள் தெரியவந்துள்ளன.
கர்நாடகா பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.
எனவே, மஜத ஆட்சியமைத்தால் ஆதரவு தருவோமென காங்கிரஸ் கூறியுள்ளது.முதல்வர் பதவி மஜதவுக்கு அதாவது குமாரசாமி முதல்வராவார்.
துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு தரப்படவேண்டும்.
34பேர் கொண்ட அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் காங்கிரசுக்கு தரவேண்டும்.
மேலவையிலும் பாதி இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.மக்களவை தேர்தலை இருகட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
மக்களவை தேர்தலிலும் சரிபாதி இடங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு இரு கட்சிகள் இடையே டீல் பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here