முதல் வாய்ப்பு பாஜகவுக்குத்தான்!

பெங்களூர்:கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் வாஜ்பாய்வாலா பாஜகவுக்குத்தான் முதல்வாய்ப்பு தருவார் என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று தெரியவந்தது.மஜத ஆட்சியமைத்தால் ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது.
முதல்வர் பொறுப்பேற்கவுள்ள மஜத தலைவர் குமாரசாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, ஆட்சியமைப்போம் என்று பாஜகவும் உறுதியாக உள்ளது. அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 7உறுப்பினர்களது ஆதரவை பெற 2நாள் அவகாசம் பெறும் என்றும் தெரியவந்துள்ளது.பொம்மை வழக்கு தீர்ப்புப்படி தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதலில் ஆளுநர் அழைப்பு விடுக்கவேண்டும். அதன்படி பாஜகவுக்குத்தான் முதல் அழைப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.இதற்கிடையே தன்னை சந்திக்கவந்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.  தேர்தல் முடிவுகள் முறையாக அறிவிக்கப்பட்டதும் ஆளுநர் மாளிகை கதவுகள் திறக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here