தாயும் தந்தையுமானவர் இறைவன் ஆனார்!

சென்னை: இளைய தலைமுறைக்கு வாழ்க்கையை படிக்க கற்றுத்தந்த எழுத்தாளர் பாலகுமாரன்(71) காலமானார்.
கவிதை, கதை, நாவல், சினிமா என்று பலவடிவங்களில் இலக்கிய ருசியை வாசகரிடம் தட்டிஎழுப்பியவர்.
துள்ளித்துடித்து இயங்கும் இளைய தலைமுறையை உனக்குள் உற்றுப்பார்த்து இயங்கவைத்தவர்.
எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினருடன் சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்தார்.

மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
1946ல் தஞ்சை மாவட்டம் பழமார்நேரி கிராமத்தில் பிறந்தவர்.
நூற்றுக்கணக்கான கதைகள், நாவல்கள், கவிதை, சினிமா என்று தமிழ்ச்சமூகம் வளர உரமாக அளித்தவர். இவருக்கு 2மனைவிகள். 2குழந்தைகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here