மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் திடீர் அழைப்பு!

பெங்களூர்: கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், மக்கள் அளித்த முடிவுக்கு தலைவணங்குகிறோம். தற்போதைய நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. மஜத ஆட்சியமைத்தால் ஆதரவு தருவோம். இதுகுறித்து மஜத தலைவர் தேவகவுடா, குமாரசாமியிடம் பேசியுள்ளோம். அவர்கள் மாலையில் முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளனர் என்றார். இதற்கிடையே, இன்று மாலையில், பாஜக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறவுள்ளது. அக்கட்சிக்கு 3மணியளவில் 104 இடங்கள் உறுதியாகி இருந்தன. எனவே, எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவுக்கு ஆளுநர் முன்னுரிமை அளிப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here