திவாகரனுக்கு அழைப்பு! பாஜக யோசனை!!

சென்னை: சசிகலா என் முன்னாள் சகோதரி என்று கூறி அவருடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார்
சசிகலா சிறைக்கு சென்றபின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அமமுக என்ற அமைப்பை நடத்திவருகிறார். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவான அவருக்கு ஆதரவாக அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.அவர்களில் பலரை திவாகரன் தமிழக அரசுக்கு ஆதரவாக திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவுக்கு தெரியவந்தது.
துரோகிகளுடன் கூட்டுவைத்துள்ள திவாகரன் தனது பெயர், படத்தை பயன்படுத்த தடைவிதித்தார் சசிகலா.அதுதொடர்பாக வழக்கறிஞர் மூலமாக திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதுகுறித்து திவாகரன் மன்னார்குடியில் பேட்டியளித்தார். சசிகலாவை முன்னாள் சகோதரி என்ற அவர் இனி மன்னார்குடி மாபியா என்ற அடைமொழி தனக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, திவாகரன் பக்தி உடையவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனி செல்வாக்கு உடையவர். எனவே, அவரை நமது கட்சிக்கு அழைக்கலாமா என்ற ஆலோசனை பாஜகவுக்கு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here