Connect with us

india

பாஜக ஆட்சியமைக்கும்! எடியூரப்பா உறுதி!!

Published

on

பெங்களூர்: கர்நாடகாவில் எனது தலைமையில் பாஜக ஆட்சியமைக்கும் என்று உறுதி தெரிவித்துள்ளார் எடியூரப்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவிக்கிறேன். பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

எங்கள் தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு அறிவிக்கவுள்ளேன். தேர்தல்முடிவுகள் இன்னமும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. எனவே, காத்திருக்கிறோம்.

நான் எனதுதலைமையிலான அரசை அமைப்பது குறித்தே ஆலோசிக்கிறேன். அதில் உறுதியாக உள்ளேன்.

மற்ற கட்சிகள் ஆட்சியமைக்க முயல்வது குறித்து பேசவிரும்பவில்லை என்றார்.

 

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator