மத்திய அரசின் காவிரி வரைவு அறிக்கை! 4மாநில அரசுகள் சரிபார்க்க உத்தரவு!!

டெல்லி:காவிரி பங்கீடு தொடர்பான வரைவு அறிக்கையை சரிபார்த்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு 4மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை பிப்ரவரி 16ல் வழங்கியது.
அத்தீர்ப்பில் தமிழகத்துக்கான நீரின் அளவை 177.25டி.எம்.சியாக குறைத்தது.
மேலும், காவிரிநீர்பங்கீட்டை கண்காணிப்பதற்கான அமைப்பை உருவாக்கவும் 6வாரம் அவகாசமளித்தது.கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த காலதாமதம் செய்த மத்திய அரசு இன்று அதுதொடர்பான வரைவறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய அரசு வழக்கறிஞர், இந்த ஸ்கீம் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றார்.அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி மீண்டும் ஒரு விவாதத்துக்குள் நாம் செல்லவேண்டாம்.
பிரிவு6ஏ ஒரு ஸ்கீமை வலியுறுத்துகிறது. அது கட்டாயமானது என்றார்.
இந்த ஸ்கீமின் படி அமையவுள்ள ஆணையமோ, குழுவோ எதுவேண்டுமானாலும் நீங்களே முடிவுசெய்யுங்கள் என்று நீதிபதிகளிடம் மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.அப்போது, தமிழக அரசு வக்கீல் சேகர் நாப்தே குறுக்கிட்டு, என்ன முடிவுசெய்தாலும், இந்த நீதிமன்ற அறையிலேயே, நீதிபதிகள் முன்னிலையிலேயே முடிவு செய்துவிடுங்கள்.
பிப்ரவரி16ம் தேதி தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக உள்ளதா என்பதுதான் எங்களுக்கு தேவை என்றார்.தலைமை நீதிபதி, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஸ்கீம் எப்படி இருக்கிறது என்று நீதிமன்றம் ஆராயாது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதுகுறித்து ஆராய்ந்து, தீர்ப்புடன் பொருந்துகிறதா என பார்க்கவேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கை மே 16க்கு ஒத்திவைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here