வெளிநாடுகளில் திமுக கொடிபறக்கும்! கத்தாரில் கனிமொழி எம்பி பேச்சு!!

கத்தார்: உலகநாடுகள் அனைத்திலும் திமுக கொடிபறக்கும் என்று தெரிவித்தார் அக்கட்சி எம்பி கனிமொழி.
கத்தார் பன்னாட்டு திமுக சார்பில் கலைஞரின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:திமுக தலைவர் கருணாநிதி எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல. தமிழ்ச்சமூகத்துக்கே தலைவராக விளங்குகிறார்.
கடல்கடந்துவாழும் இந்நாட்டில் கூட அவர் உடல்நலன் மேல் அக்கறைவைத்து பலர் என்னிடம் அன்புடன் விசாரிக்கின்றனர்.
அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.எல்லா அமைப்புகளையும் முந்திக்கொண்டு கத்தார் பன்னாட்டு திமுக சார்பில் கலைஞரின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
கத்தாரில் மட்டுமல்ல லண்டன் உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் திமுக கொடிபறக்கும்.
தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞரின் எழுத்தும், பேச்சும் எழுதிவந்தன. தமிழகமும், தமிழ்ச்சமூகமும் தலைநிமிரவேண்டும் என்பதே அவரது ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது.அவர் முதல்வராக இருந்து அறிவித்த திட்டங்கள் தொலைநோக்கு பார்வை உடையவை.
அதனால், பெண்கல்வி, இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைத்தன.
சமூக ஊடகங்களில் கலைஞரை சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இணைய கல்வியை அவர்தான் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பதை மறந்துவிடக்கூடாது.தமிழ்மொழி தொன்மையானதும், தொடர்ச்சியானதுமாகும். எனவே,நம் குழந்தைகளுக்கும் அதனை கற்றுத்தரவேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here