பந்து வீச தாமதம்! ரஹானேவுக்கு அபராதம்!!

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளின்படி பந்துவீச தாமதம் செய்யக்கூடாது.ஆனால், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிறு நடந்த போட்டியில் ரா.ரா. அணியினர் பந்துவீச தாமதப்படுத்தினர்.
இது தொடர்பாக அம்பயரிடம் புகார் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகிகள் இக்குற்றச்சாட்டு பரிசீலனை செய்யப்பட்டது.
ராஜஸ்தான் அணிமீது இக்குற்றச்சாட்டு முதன்முறை என்பதால் அந்த அணி கேப்டனுக்கு ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிறு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்தஅணியின் ஜாஸ் பட்லர் 94 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here