காவிரி வரைவு அறிக்கை முழுவிபரம்!

புதுடெல்லி: காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஸ்கீமை தாக்கல் செய்தது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி திட்டஅறிக்கையைத் தாக்கல் செய்தார். அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:# காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண வாரியம் அல்லது ஆணையம் அல்லது குழு இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும்.

# காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தும் அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும்.# காவிரி ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்கும்.
அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் இருப்பார்.
பொறியியல் துறையில் வல்லுனர் அல்லது மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவார்.

# காவிரி ஆணையத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு பகுதிநேர உறுப்பினர்கள் இடம் பெறுவர். மொத்தம் 10பேர் இக்குழுவில் இடம்பெறுவர்.

#இந்த அமைப்பின் ஆலோசனை, அறிவுரைப்படி அணைகள், நீர்தேக்கங்கள் நிர்வகிக்கப்படும்.
# ஜூன் மாதந்தோறும் அணைகளில் நீர் இருப்பை இந்த அமைப்பு ஆய்வு செய்யும்.

# இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் ஊதியம் ஆகியவற்றில் 80 சதவீதத்தைத் தமிழகமும், கர்நாடகமும் தலா 40 சதவீதம் எனப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதமும் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.# இந்த அமைப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், நீரை எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீரைத் தீர்ப்பின் அடிப்படையில் பகிர்ந்தளித்தல், காவிரி நீர் பங்கீட்டை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரும். அணைகளில் உள்ள நீரைக் கண்காணித்து, நீர் திறந்துவிடுதலை கண்காணிக்கும்.

# காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவில் இருவர் முழுநேர உறுப்பினர்கள், இருவர் பகுதி நேர உறுப்பினர்களாகவும், மாநிலத்துக்கு ஒருவர் எனவும் இருப்பார்கள். இதில் மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இடம் பெறுவார்.
இவ்வாறு வரைவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here