வேலூர்: வேலூரில் நடுரோட்டில் தவித்த பெண்களுக்கு உதவிய போலீசாருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு கிடைத்து வருகிறது.
வேலூா் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள பொன்னியின் பட்டறை என்ற இடத்தில் ஒரு காரின் டயர் வெடித்த நிலையில் 3 பெண்கள் 2 குழந்தைகளுடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்தனர்.அவ்வழியாக பணி முடித்து வந்த வேலூா் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தங்க வாகனத்தை நிறுத்தி என்னவென விசாரித்தனா்.
அப்பெண்களின் சிரமத்தை புரிந்துகொண்ட அவர்கள், பழுதான டயரை கழற்றி ஸ்டெப்னி டயரை மாட்டி கொடுத்தனா். நீண்டநேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்தோம். யாரும் உதவ முன் வரவில்லை.
குழந்தைகள் வெப்பம் தாங்காமல் அழுது கொண்டிருந்தனா். நீங்கள் சமயத்துக்கு உதவிசெய்தீர்கள் என்று அப்பெண்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனா்.
இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வெளியாகி ஆயுதப்படை போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.