நடிகர் விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷாலை எதிர்த்து மூத்த இயக்குநர்கள், நடிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.                                  சென்னை தியாகராய நகரில் தயாரிப்பாளர் சங்கத்தில் அதன் உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். திரைப்படத்துறை போராட்டத்துக்குப் பின் பல திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.ஆனால், இரும்புத்திரை என்ற தனது படத்தை தயாரிப்பாளர் சங்கப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஷால் வெளியிட்டுள்ளார். விஷால் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் பதவியிலிருந்து இறக்கும் சூழல் உருவாகும் என ஜே.கே.ரித்தீஷ் எச்சரித்தார்.தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த போது விஷால் அணியினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தயாரிப்பாளர் ராஜன் குற்றம்சாட்டினார்.
தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர் சங்க அமைப்பு தேவையா? என ராதாரவி கேள்வி எழுப்பினார்.
இதுவரை தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து விஷால் வெளியிடாததற்கு காரணம் அவர்களுடனான டீலை விஷால் முடித்துக்கொண்டதுதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.ராஜேந்தர், வைப்புத் தொகை 7 கோடி ரூபாய் எங்கே போனது? எனக் கேள்வி எழுப்பினார். வீடியோ பைரசியைக் குறைக்க தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பேன் என்று மார்தட்டியதன் முடிவு என்ன? என்றும் வினவினார். பெரிய நடிகர் படமே 200 தியேட்டருக்கு மேல் ரிலீஸ் ஆகக் கூடாது என்றவர், தமது இரும்புத்திரை என்ற படத்தை மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடலாமா எனவும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு தென்னிந்திய எனத் தொடங்கும் பெயருக்கு பதில் தமிழ் என மாற்ற வேண்டும் என பாரதிராஜா வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here