கழுத்தை அறுத்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!

கரூர்: திருமணத்துக்கு பார்த்த பெண்ணை பிடிக்காத போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் தினேஷ்குமார்.பி.இ.,படித்துள்ள இவர் தஞ்சை ஆயதப்படையில் காவலர் பயிற்சிபெற்றுவருகிறார்.
மதியம் உணவு இடைவேளையின் போது பாத்ரூம் சென்றார்.
நீண்டநேரம் அவர் வெளியே வராததால் நண்பர்கள் கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.தினேஷ்குமார் கை, கழுத்தில் ரத்தம் வெளியேற மயங்கிக்கிடந்தார்.
உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தினேஷ்குமார் திருமணத்துக்காக பெண் பார்த்துள்ளனர். பெண்ணை அவருக்கு பிடிக்கவில்லை.
இருந்தபோதும் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளவேண்டியிருந்தது.
இதனால், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here